Saturday, May 23, 2009

கண்களில் உன்நினைப்பு

கண்களில் உன்நினைப்பு காதோரம் உன்காணம்
காகிதத்தில் உன்கவிதை கருத்தெல்லாம் உன் எண்ணம்
கடுகெனவூம் இரங்காத உன்நினைப்பு எதற்காக
என் கருத்தை கேக்காத உன் எண்ணம் எதற்காக..?

ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை என்னோடு ஒரு பார்வை என்மீது என
ஒரு வேளை எதிர்பார்த்து பல வேளை எதிர்கொண்டேன்
சில வேளை என்னைபார்த்து பல வேளை முகம்சுழித்து
மௌணமாக நீ சென்றால் மரணிக்க தோன்றுதடி…

மலராண உன் பாதம்

மலராண உன் பாதம் மலரட்டும்
என்றுகரம்மேலே மலர் கொண்டு பாத்திருந்தேன் நீ
எனைக்கொண்டு மலர் பறித்து
எனைக்கொன்று மலர் சு(ட்)டினாய்

காண்னே

கண்னே உண்நினைவை
கணநேரம் நினைத்திட்டால்
காற்றும் காணம் இசைத்திடும் -ஆனால்
நாணோ கண்ணீரில் கரைகின்றேனே?

உன்நினைவை

உன்நினைவை நான் சுமக்க
கண்ணிரை இமை சுமக்கும்
என் நினைவை நீ சுமந்தால்
கண்ணிமைகள் கண்ணிமைக்கும்

Thursday, May 21, 2009

வேதனை தேவைதான்

பாசம் வைத்தேன் பழகத் துடித்தேன்
தேவி உந்தன் முகத்தைக் காண
தேடி அலைந்தேன் தேருநாயானேன்
தேவை தான் இந்த வேதனை தேவைதான்

நான் தானே நீ

ஏன் உன்னைப் பார்க வேண்டும்
ஏன் உன்னை இரசிக்க வேண்டும்
ஏன் உன்னை வாழ்த்த வேண்டும்
ஏன் உன் நினைவை மீட்க வேண்டும் -தேவையில்லை
ஏன் என்றால் நான் தானே நீ

Wednesday, May 20, 2009

காய்(ந்)திடுமே

காத்திருந்த காலமெல்லாம்
கணநேரம் ஆகலாம்
காணம் கூட பாடலாம் - ஆனால்
காத்திருந்த காலம் காய்(ந்)திடுமே

வீ(நா)ய் அலையிராய்

உன்னை நான் பார்த்து
என் அன்பே நீ தான் என்றால்
ஏன் வீ(நா)ய் அலையிராய் என்று
விரட்டினால் நான் என்செய்வேன்

நீ செல்வதை

பாத்திருந்தேன் உன்னை
எண்ணி வீற்றிருந்தேன்
வீதி வழி விழித்திருந்தேன்
என்னை மறந்து நீ செல்வதை

கதையாக போய்விடுமா?

கதைக்காதை கதைக்காதை
என்று சொல்லி கதைத்த
நாட்கள் எல்லாம்
கதையாக போய்விடுமா?

உன்னைப் பார்பதற்காய்

உன்னைப் பார்பதற்காய்
பாரினையோ சுற்றிடுவேன்
ஆனாலும் உன் பார்வை
என் மீது இல்லையே?

கண்டநாள்

கண்டநாள் என்றும் காணாத நாள் என்றும்
இரு நாள் என் நாட்குறிப்பேட்டில் உண்டு – உண்னை
அதற்காக என்னை கண்டும் காணமல் நீ சென்றால்
அதை எந்த நாளாக நான் குறிப்பேன்?

பொய் கோபம்

என் மேலே ஏன் இந்த பொய் கோபம்
மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே
மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே
என் மெய்யான பாசத்தை

கணபதியே

கணபதியே கனிபெற்ற பெரு நிதியே
உண்ணை நினையாது ஏது வழியோ
ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால்
எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே