Wednesday, June 16, 2021

 மனிதம்  எப்போது வழித்துடும்


உலகம் செதுக்கியெடுத்த ஒரு அற்புத சிலை

ஊருராய் அலையும் இது ஆசையைசில் தோய்ந்து

கனவு கண்டு வழிக்கும் முன்னர் 

காணும் இடத்தில் கண்டதை எண்ணும்.


அன்னையும் பிதாவும் கடவுளேன  அறிந்தும்

ஆலயம்  முழுவதும் கடவுளை தேடுது.

நல்ல முகங்கள் முன்னே இருந்தும்

நாளும் பொழுதும் முகநுளில் தேடுது.


கணினி கணினி கணினி என்று 

காணும் இடமென்லாம் கதைகள் கேட்குது.

ஒன்றையும் மூன்றையும் கூட்டச்சொன்னால்

ஓகோ ஒகோ வெண்று கணினிச் செய்நிரைலை எதிர்பார்குது


ஒழுக்கம்  எங்கே என்று தேடி

ஓடும் ஆற்றில் குதித்து தேடுது

செய்யும் செயலின் தன்மையறியாது

சேயும் தாயம் செயலில் இறங்குது.


மரங்கள் நாட்ட வேண்டும் என்று

மா மரங்களேல்லாம் தரையில் படுக்குது

தரமான வீதி வேண்டும் என்று

தாகம் தணிக்கும் கிணற்றை மூடுது


பட்டம் விட்டு மகிழ்த நினைவை

பாடப்புத்தகம் மட்டும் காட்டுது

இருந்து பேசிய திண்ணை எல்லாம் - வாடகை

ஈட்டும் வீடாய் மாறுது


அன்பு கற்பு இரண்டும் இன்றி

ஆட்டம் காட்டும் சினிமா இருக்குது

இதில் நித்தம் பொழுதை தொழைத்த இளைஞர்

ஈடேற வாழ்ப்பு குறைவாய் இருக்குது


மனிதர் கூடும் விழாக்களேல்லாம்

மாதத்திற்கு ஒன்றாய் குறையுது

குடும்பம் குடும்பமாய் கூடிய போதிலும்

கூட்டம் ஏனோ குறைவாய் இருக்குது


அன்பாய் ஆசிரியர் ஆற்றிய கல்வி

ஆன்லையின் கல்வியாய் மாற்றம் கண்டது.

குழுவாய் செயற்பட்டு மகிழ்ந்த பிள்ளை

கூ கூ என இன்று கூவித்திரியுது.


கடையை நாடி ஓடிய கூட்டம் 

கானோம் கடையை என்று திரும்புது

பழசோ புதுசோ என்று பாராது 

பாழான பொருளையும் பார்வையின்றி வாங்குது.


நித்தம் ஒரு வீடு என்று 

நீடித்துழைத்த வண்டியெல்லாம்

வட்டம் மட்டும் வீட்டில் போட்டு

வாடி வதங்கி காத்தின்றி யிருக்குது


விலை குறைவான பொருள் தான் வேண்டும் என்று

வீட்டில்  நித்தம் பேரம் நடக்குது

விடு விடு பொருள் வந்தால் காணும் என்று 

வீண்வார்த்தையின்றி பொருளை வாங்குது.


நித்தம் நித்தம் சத்தமின்றி உணவை உண்டு

நீண்ட நீண்ட வரிசையிலே   காத்து நிற்குது

உண்ட உணவு  மிச்சமென்றி செமிக்கும் முன்னர்

ஊர் உலகிக்கு மிச்மின்றி மீண்டும் உணவை உண்ணுது.


சிறிய பெரிய பேதமின்றி

சீறிப்பாயும்  மனித இனம்

கடுகும்  தரமாய் ்ஆகும் மென்று

காணும் உலகை இரசித்தால் நன்று


வணக்கம் வணக்கம் என்று சொல்லி

வாழும் உலகை வளமாய்பெற்றால்

வண்ணமான வாழ்கையா  நாளும்

வானம் கூடுமே.



 





Friday, June 11, 2021

துதிக்கை கொண்ட தலைவா - உன்னை 

நம்பிக்கை கொண்டு தொழுதேன் - உன்

வலக்கை கொண்டு - என்

பகையை கொன்று  போவாயோ


நித்தம் எந்தன் நினைவில் - உன்னை

நாளும்  சுமந்தேன்  - என் 

நிலையை மறந்தேன்  - உந்தன்

கருனை மழை பொழியாயோ


நடனமாடும்  உன்அழகு - எந்தன்

எண்ணத்திலே நிலைத்திருக்கு - உந்தன் 

காலடியில் தினமிருக்க - என்

கடின மனம் போக்காயோ


கோயிலுக்கு தினம் சென்றேன் - உந்தன் 

புசையிலே நான் நனைய - எந்தன்

இடர்களை களைந்து  - உன்

திருவடியில் சேர்காயோ


எத்திசையில் நானிருந்தும் - உந்தன்

திருவழகை எண்ணிடுவேன் - எந்தன்

தீமைக்கு  தீயிட்டு -  உன்

திசையை காட்டாயோ


கணிசமான  உன் பார்வை - எந்தன் 

செயல்களிலே நிலைத்திருக்கு -  உந்தன்

கடைக்கண்ணின் ஒளி  கொண்டு - என்

கடைமைகளை  பார்காயோ


அழகான  என் வாழ்வு - உந்தன்

அன்பினிலே தான் இருக்கு - என்

வழமான வாழ்விற்கு - உன் 

வரமொன்று தாராயோ







Saturday, March 9, 2019

பரீட்சை

பரீட்சை நேரம் கிட்ட
பாடமெல்லாம் மெல்ல மறந்தோட
பார்பவர் கேள்விகள்  கேட்டோட
பெற்றோர் கர்ச்சனை காதோட
வாத்தியார் வாசலில்  பிரம்போட
மனமோ என்னை விட்டோட
பரீட்சை நேரம் வந்தோட
பரீட்சை வினாக்கள் கையோட
விரலும்  கேட்கும் விட்டோட
என் வயதும் நினைக்கும் நிற்பாட்ட
பரீட்சை  போதும் பிற்போட
நாறிப் போவேன் விட்டோட

அச்சமெல்லாம் விட்டோட
அறிவின் மையம் என்னோட
கற்றால் பரீட்சை வாழ்வோட
கலந்து போகும் நீரோட


முருகா

முருகா  என்னும் நாமத்தை நாவாலே  உரைத்திட்டால்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா  உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன்  புகழைப்  பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்



மகளிர் தினம்


kfspu; jpdnkhd;W Ntz;Lk; - ,ij
kdj;jpNy jpdk; epidj;jply; Ntz;Lk;
ngz;ikia kjpj;jpl Ntz;Lk; - jpdk;
Ngjik ,y;yhJ Nghw;wpl Ntz;Lk;
ngz;ikia fhjypf;f Ntz;Lk; - kdk;
NgUz;ik vd;gij ep&gpf;f Ntz;Lk;
mk;khTk;> mf;fhTk;> md;G kfSk; ngz;jhd;-,jd;
ghj;jpukwpe;J kjpj;jply; Ntz;Lk;.
ngz;ikia kdpjk; cz;ikaha; kjpj;jpl;lhy; - ,t;
cyfpy; kfpo;r;rp cz;ikNa.

Wednesday, June 3, 2009

உன் மேலே

உன் மேலே என் பார்வைபட்டநாள் முதல்
என் மேலே என்பார்வை பட்டுவிட்டது அது
உன்னை பார்க்க மட்டும்தான்
அது மொட்டுவிட்டது

Saturday, May 23, 2009

கண்களில் உன்நினைப்பு

கண்களில் உன்நினைப்பு காதோரம் உன்காணம்
காகிதத்தில் உன்கவிதை கருத்தெல்லாம் உன் எண்ணம்
கடுகெனவூம் இரங்காத உன்நினைப்பு எதற்காக
என் கருத்தை கேக்காத உன் எண்ணம் எதற்காக..?