துதிக்கை கொண்ட தலைவா - உன்னை
நம்பிக்கை கொண்டு தொழுதேன் - உன்
வலக்கை கொண்டு - என்
பகையை கொன்று போவாயோ
நித்தம் எந்தன் நினைவில் - உன்னை
நாளும் சுமந்தேன் - என்
நிலையை மறந்தேன் - உந்தன்
கருனை மழை பொழியாயோ
நடனமாடும் உன்அழகு - எந்தன்
எண்ணத்திலே நிலைத்திருக்கு - உந்தன்
காலடியில் தினமிருக்க - என்
கடின மனம் போக்காயோ
கோயிலுக்கு தினம் சென்றேன் - உந்தன்
புசையிலே நான் நனைய - எந்தன்
இடர்களை களைந்து - உன்
திருவடியில் சேர்காயோ
எத்திசையில் நானிருந்தும் - உந்தன்
திருவழகை எண்ணிடுவேன் - எந்தன்
தீமைக்கு தீயிட்டு - உன்
திசையை காட்டாயோ
கணிசமான உன் பார்வை - எந்தன்
செயல்களிலே நிலைத்திருக்கு - உந்தன்
கடைக்கண்ணின் ஒளி கொண்டு - என்
கடைமைகளை பார்காயோ
அழகான என் வாழ்வு - உந்தன்
அன்பினிலே தான் இருக்கு - என்
வழமான வாழ்விற்கு - உன்
வரமொன்று தாராயோ
No comments:
Post a Comment