Saturday, March 9, 2019

பரீட்சை

பரீட்சை நேரம் கிட்ட
பாடமெல்லாம் மெல்ல மறந்தோட
பார்பவர் கேள்விகள்  கேட்டோட
பெற்றோர் கர்ச்சனை காதோட
வாத்தியார் வாசலில்  பிரம்போட
மனமோ என்னை விட்டோட
பரீட்சை நேரம் வந்தோட
பரீட்சை வினாக்கள் கையோட
விரலும்  கேட்கும் விட்டோட
என் வயதும் நினைக்கும் நிற்பாட்ட
பரீட்சை  போதும் பிற்போட
நாறிப் போவேன் விட்டோட

அச்சமெல்லாம் விட்டோட
அறிவின் மையம் என்னோட
கற்றால் பரீட்சை வாழ்வோட
கலந்து போகும் நீரோட


No comments:

Post a Comment