மனிதம் எப்போது வழித்துடும்
உலகம் செதுக்கியெடுத்த ஒரு அற்புத சிலை
ஊருராய் அலையும் இது ஆசையைசில் தோய்ந்து
கனவு கண்டு வழிக்கும் முன்னர்
காணும் இடத்தில் கண்டதை எண்ணும்.
அன்னையும் பிதாவும் கடவுளேன அறிந்தும்
ஆலயம் முழுவதும் கடவுளை தேடுது.
நல்ல முகங்கள் முன்னே இருந்தும்
நாளும் பொழுதும் முகநுளில் தேடுது.
கணினி கணினி கணினி என்று
காணும் இடமென்லாம் கதைகள் கேட்குது.
ஒன்றையும் மூன்றையும் கூட்டச்சொன்னால்
ஓகோ ஒகோ வெண்று கணினிச் செய்நிரைலை எதிர்பார்குது
ஒழுக்கம் எங்கே என்று தேடி
ஓடும் ஆற்றில் குதித்து தேடுது
செய்யும் செயலின் தன்மையறியாது
சேயும் தாயம் செயலில் இறங்குது.
மரங்கள் நாட்ட வேண்டும் என்று
மா மரங்களேல்லாம் தரையில் படுக்குது
தரமான வீதி வேண்டும் என்று
தாகம் தணிக்கும் கிணற்றை மூடுது
பட்டம் விட்டு மகிழ்த நினைவை
பாடப்புத்தகம் மட்டும் காட்டுது
இருந்து பேசிய திண்ணை எல்லாம் - வாடகை
ஈட்டும் வீடாய் மாறுது
அன்பு கற்பு இரண்டும் இன்றி
ஆட்டம் காட்டும் சினிமா இருக்குது
இதில் நித்தம் பொழுதை தொழைத்த இளைஞர்
ஈடேற வாழ்ப்பு குறைவாய் இருக்குது
மனிதர் கூடும் விழாக்களேல்லாம்
மாதத்திற்கு ஒன்றாய் குறையுது
குடும்பம் குடும்பமாய் கூடிய போதிலும்
கூட்டம் ஏனோ குறைவாய் இருக்குது
அன்பாய் ஆசிரியர் ஆற்றிய கல்வி
ஆன்லையின் கல்வியாய் மாற்றம் கண்டது.
குழுவாய் செயற்பட்டு மகிழ்ந்த பிள்ளை
கூ கூ என இன்று கூவித்திரியுது.
கடையை நாடி ஓடிய கூட்டம்
கானோம் கடையை என்று திரும்புது
பழசோ புதுசோ என்று பாராது
பாழான பொருளையும் பார்வையின்றி வாங்குது.
நித்தம் ஒரு வீடு என்று
நீடித்துழைத்த வண்டியெல்லாம்
வட்டம் மட்டும் வீட்டில் போட்டு
வாடி வதங்கி காத்தின்றி யிருக்குது
விலை குறைவான பொருள் தான் வேண்டும் என்று
வீட்டில் நித்தம் பேரம் நடக்குது
விடு விடு பொருள் வந்தால் காணும் என்று
வீண்வார்த்தையின்றி பொருளை வாங்குது.
நித்தம் நித்தம் சத்தமின்றி உணவை உண்டு
நீண்ட நீண்ட வரிசையிலே காத்து நிற்குது
உண்ட உணவு மிச்சமென்றி செமிக்கும் முன்னர்
ஊர் உலகிக்கு மிச்மின்றி மீண்டும் உணவை உண்ணுது.
சிறிய பெரிய பேதமின்றி
சீறிப்பாயும் மனித இனம்
கடுகும் தரமாய் ்ஆகும் மென்று
காணும் உலகை இரசித்தால் நன்று
வணக்கம் வணக்கம் என்று சொல்லி
வாழும் உலகை வளமாய்பெற்றால்
வண்ணமான வாழ்கையா நாளும்
வானம் கூடுமே.